ஒருவர் நடக்கும் விதத்தை கொண்டே அவரை அடையாளம் காணும் புதிய கண்காணிப்பு மென்பொருள்

Home

shadow

                     ஒருவர் நடக்கும் விதத்தை கொண்டே அவரை அடையாளம் காணும் புதிய கண்காணிப்பு மென்பொருளை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த வாட்ரிக்ஸ் எனும் நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த புதிய மென்பொருள் மூலம், கண்காணிப்பு கேமராவில் ஒருவர் நடக்கும் விதத்தை வைத்தே அவரை கண்டுபிடிக்க முடியும். நடக்கும் விதம் மட்டுமல்லாது, ஒருவரின் உருவ அமைப்பு, செயல்பாடு போன்றவற்றை கொண்டும் அவரை அடையாளம் காண முடியும். தற்போது இந்த மென்பொருளானது ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் காவல் துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். 50 மீட்டர் தொலைவில் இருக்கும் ஒருவரையும் இந்த மென்பொருள் மூலம் அடையாளம் காண முடியும் என வாட்ரிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகளின் மூலம் மட்டுமே அடையாளம் காண முடியும் எனவும், விரைவில் நேரலை பதிவுகளின் போதே அடையாளம் காணும் வகையில் மென்பொருளை மேம்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :