ஒலியை விட வேகமாக செல்லும் சக்தி வாய்ந்த ஏவுகணை - வெற்றிகரமாக முடிந்த சோதனை

Home

shadow

                   ஒலியை விட வேகமாக செல்லும் சக்தி வாய்ந்த ஏவுகணையை சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

டி எப் 26 என்ற  இந்த  ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. ஏவப்பட்ட இடத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகக் தாக்கியது. 3 ஆயிரம் கிலோ மீட்டர் முதல் 5 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கும் இந்த ஏவுகணை, வானில் பறந்து கொண்டிருக்கும் போதே அதன் இலக்கிற்கு ஏற்ற வகையில் திசையை மாற்றும் திறன் கொண்டது. தென் சீன கடலில் ரோந்து வரும் அமெரிக்க கடற்படைக்கு மிக பெரும் அச்சுறுத்தலாக இந்த ஏவுகணை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து கனரக வாகனங்கள் மூலமும், விமானத்தில் எடுத்துச் சென்றும் டி எப் 26 ஏவுகணையை செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :