ககன்யான் விண்கலம் : ரூ.10 ஆயிரம் கோடியில் தனி பட்ஜெட் ஒதுக்கீடு ; 3 வீரர்கள் கொண்ட குழு 7 நாள் விண்வெளி பயணம்

Home

shadow

                ககன்யான் விண்கலம் மூலம் 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் தனி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என மத்திய அரசு அறிவித்து உள்ளது.


கடந்த 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று உரை ஆற்றிய பிரதமர் நரேந்திர மோடி 2022-ம் ஆண்டுக்குள் ககன்யான் விண்கலம் மூலம் இந்தியா, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் என்று அறிவித்தார்.  


3 வீரர்கள் கொண்ட குழுவை 7 நாட்களுக்கு விண்வெளியில் அனுப்பி வைக்கும் திட்டம் இது. 


இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசின் சார்பில் அணுசக்தி, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோ தலைவர் கே.சிவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியபோது, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் திட்டத்தை இந்தியா 2022-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றும் எனவும், இந்த திட்டத்திற்காக மேலும், 10 ஆயிரம் கோடி ரூபாய் தனி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும் எனவும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்


இஸ்ரோதலைவர் கே.சிவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, சந்திரயான்-2 திட்டம் தான் மிக முக்கியமான திட்டம் எனவும், வரும் ஜனவரி மாதம் சந்திரயான்-2 விண்வெளியில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

இது தொடர்பான செய்திகள் :