காப்புரிமையி்ல் கசிந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன்

Home

shadow

ஸ்மார்ட்போன்களில் பெசல் லெஸ் வடிவமைப்பு வழங்கத்துவங்கிய நிறுவனங்களில் எல்ஜி நிறுவனம் முதன்மையானதாக இருக்கிறது. எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் மெல்லிய பெசல்களை வழங்கியது. இதே வழக்கத்தை எல்ஜி நிறுவனம் தனது அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிலும் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018-இல் எல்ஜி நிறுவனம் வெளியிட இருக்கும் ஜி7 ஸ்மார்ட்போனில் முழுமையான டிஸ்ப்ளே, மற்றும் மேம்படுத்தப்பட்ட ஐரிஸ் ஸ்கேனர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இணையத்தில் கசிந்த காப்புரிமை தகவல்களில் புதிய எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐரிஸ் ஸ்கேனர் அம்சம் முன்பை விட பாதுகாப்பானதாக மாற்ற மேம்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட ஐரிஸ் ஸ்கேனரில் ஐரிஸ் அளவு மாற்றப்பட்டு, ஸ்கேனர் பெறும் வெளிச்சத்திற்கு ஏற்ப ஸ்கிரீனினை செட்டப் செய்யும் என கூறப்படுகிறது. ஐரிஸ் ஸ்கேனர்கள் இன்ஃப்ராரெட் வெளிச்சத்தில் இயங்கும் என்பதால், வழக்கமான கேமராவினை இன்ஃப்ராரெட் கேமராவிற்கு மாற்றிக் கொள்ளும் கேமராவினை எல்ஜி உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. புதிய கேமரா வழங்கப்படும் பட்சத்தில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்திற்கு தேவைப்படும் சென்சார்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடியும். இதனால் முன்பக்கம் வழக்கத்தை விட மெல்லி பெசல்களை வழங்க முடியும். இதுவரை வெளியான தகவல்களில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் பெறும் முதன்மை சாதனங்களில் எல்ஜி ஜி7 இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக எல்ஜி வெளியிட்ட ஜி6 ஸ்மார்ட்போனில் புதிய ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்காமல் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற இருக்கும் நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் சாம்சங் நிறுவனமும் தனது கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இதே விழாவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது, எனினும் சாம்சங் இந்த தகவல்களை மறுத்தது.

இது தொடர்பான செய்திகள் :