குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்காதது ஏன் என வாட்ஸ்-அப் நிறுவனம்

Home

shadow

 

      குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்காதது ஏன் என வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.  

     சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்-அப் நிறுவனம், குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்கவில்லை எனவும், இந்திய சட்டங்களுக்கு இணங்கவில்லை எனவும் குற்றம் சாட்டி பொறுப்புடைமை மையம் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு இணங்கும் வரை, வாட்ஸ்-அப் நிறுவனம் கட்டணம் வசூலிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் நாரிமண்இந்து மல்கோத்ரா ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்காதது ஏன்என வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு அந்த நிறுவனத்துக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்

இது தொடர்பான செய்திகள் :