குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணுக்கான சேவையை உடனடியாக துண்டிக்கக் கூடாது டிராய் அமைப்பு எச்சரிக்கை

Home

shadow

 

செல்போன் தொலை தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள் கடந்த மாதத்தில் இருந்து வடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து குறிப்பிட்ட குறுந்தகவலை அனுப்பி வருகின்றன. அதில், மாதந்தோறும் குறைந்தபட்ச தொகையை ரீசார்ஜ் செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் வெளி அழைப்பு மேற்கொள்ளும் வசதி முதலில் துண்டிக்கப்படும், அதன்பிறகு அழைப்பு பெறும் வசதியும் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ். ஷர்மா, தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களின் திட்டங்களில் பொதுவாக டிராய் தலையிடுவதில்லை. அதேநேரத்தில், வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணில் போதிய தொகை இருப்பு இருக்கும்போது, அவரது எண்ணில் மாதந்தோறும் குறைந்தப்பட்ச தொகையை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் சேவை துண்டிக்கப்படும் எனத் தெரிவிப்பதும் சரியில்லை என தெரிவித்தார்.. இதுதொடர்பாக தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களால் அனுப்பப்பட்டுள்ள குறுந்தகவலை சுட்டிக்காட்டி, டிராய் அமைப்புக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன என குறிப்பிட்ட அவர், இதை முக்கிய பிரச்னையாக டிராய்  கருதுவதால் போதிய தொகை இருப்பில் இருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணுக்கான சேவையை, மாதாந்திர குறைந்தப்பட்ச ரீசார்ஜ் செய்யாத காரணத்துக்காக உடனடியாக தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள் துண்டிக்கக் கூடாது என தெரிவித்தார். மேலும் இதுதொடர்பான டிராயின் உத்தரவு, தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :