கூகுளின் புதிய வசதி சுந்தர் பிச்சை அறிமுகம் செய்து வைத்தார்

Home

shadow

       

 செயற்கை நுண்ணறிவு மூலம் உணவு விடுதி,   மருத்துவமனைகளில் பயனாளர் சார்பில் செல்போனில் தானாகவே பேசி உதவும் செயலி வசதியை  கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற கணினி மென்பொருள் மாநாட்டில் கூகுள் தனது அடுத்த தொழில்நுட்ப புரட்சியை அறிமுகம் செய்துள்ளது. பல்லாயிரம் பேர் பங்கேற்ற இந்த மாநாட்டில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் டூப்ளக்ஸ் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்து வைத்தார். செயற்கை நுண்ணறிவு மென்பொருளான இந்த புதிய வசதி, உணவு விடுதி, மருத்துவமனை போன்ற இடங்களில் நமக்காக செல்போனில் பேசி அப்பாயின்மென்ட் பெற்றுக் கொடுக்கும். இதுகுறித்து கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறுகையில், உதாரணமாக செவ்வாய்க் கிழமை காலை 10 மணி முதல் 12 மணிக்குள் முடிவெட்டிக் கொள்ள  அப்பாயின்ட்மென்ட் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்ளலாம் எனக் கூறினார். கூகுளில் உள்ள வசதி பயனாளருக்காக, தானே போன் செய்து மனிதக் குரலில் பேசும் வகையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சுந்தர் பிச்சை தெரிவித்தார். மேலும், பேசுபவர்களின் கேள்விக்கு ஏற்ப இந்த மென்பொருள் பதில் அளிக்கும் வகையிலும் பதில் கேள்விகளை எழுப்பும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இது சரியான முறையில் செயல்பட்டால் மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் என சுந்தர் பிச்சை பெருமிதத்துடன் கூறியுள்ளார். இந்த மென்பொருளை சில வாரங்களில் சோதனை முறையில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :