கேமரா மூலம் கண்காணிக்கப்படும் முத்தழகு பட்டி கிராமம்

Home

shadow

     திண்டுக்கல், முத்தழகு பட்டியில்  டிஜிட்டல் இந்தியா திட்ட துவக்கமாகவும் குற்ற சம்பவங்களைக் குறைப்பதற்காகவும் கிராமம் முழுவதும் டிஜிட்டல் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், முத்தழகு பட்டியில் 3 ஆயிரத்து 200 குடும்பங்கள் உள்ளன. இங்கு பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முதல் கட்டமாகவும்,  முத்தழகு பட்டியில் முன்பகை காரணமாக  அடிக்கடி பல கொலைகள் நடைபெறுவதால் அவற்றைத் தடுக்கும் வகையில் முத்தழகுபட்டி இளைஞர் அமைப்பு சார்பில் கிராமத்தில் உள்ள இரண்டு பிரதான வீதிகள் மற்றும் ஏழு  சின்ன விதிகளில்  7 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் 15 இடங்களில் 29 டிஜிட்டல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இங்குள்ள கேமராக்கள் அனைத்தும் திண்டுக்கல் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முதல் தொடக்கமாக நவீன முறையில் ஊர் முழுக்க  கண்காணிப்பு பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலேயே முதல்முறையாக முத்தழகு பட்டியில்தான் கேமரா மூலம் கிராமம் முழுவதும் கண்காணிக்கப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முத்தழகு பட்டியில் நேற்று நடைபெற்ற விழாவில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் கலந்துகொண்டு கேமராக்களை இயக்கி வைத்தார்.

இது தொடர்பான செய்திகள் :