2020 ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளை ஜப்பான் தலைநகர் டோக்கியோ நடத்துகிறது...
தன் வரலாற்றிலேயே மிக புதுமையான போட்டிகளாக இந்த ஒலிம்பிக்ஸ் இருக்க பிரயத்தனம் எடுத்துக்கொண்டு வருகிறது ஜப்பான்...
இதுவரை இல்லாத அளவிற்கு, பாராலிம்பிக் போட்டிகளில் சக்கர நாற்காலிகளில் வலம்வரும் விளையாட்டு வீரர்களுக்கு உதவிசெய்ய STATE OF THE ART assistance robots மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்...
ஒரு
செய்தியாளர்கள் சந்திப்பில் முதல் முறையாக இந்த ரோபோட்டை அறிமுகப்படுத்தியுள்ளது ஜப்பான்
ஒலிம்பிக் கமிட்டி .
மனிதர்களுக்கு உதவிசெய்யும் ரோபோட்டின் முன் மாதிரியை சக்கர நாற்காலியில் இருக்கும் ஒரு பெண்ணிற்கு உதவும் வகையில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது....தன்னுடைய சுற்றுப்புறத்தை கண்டறியும் திறன்கொண்ட இந்த ரோபோட்கள் செய்தியாளர்கள் முன் விளையாட்டு வீரர்களின் கட்டளைக்கு ஏற்ப
சுற்றிச்சுற்றி வேலை செய்தது ஜப்பானின் தொழில்நுட்ப தகுதிக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது...
2020இல் ஜப்பானின் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கமிட்டி தனது ஸ்டேடியதின் முதல் சுற்றுப்பயணத்தை 30 பேர் கொண்ட ஒலிம்பிக் அதிகாரிகளுடன் சேர்ந்து நடத்தியுள்ளது..ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடக்கும் ஒலிம்பிக் VILLAGE மற்றும் ஒலிம்பிக் ஸ்டேடியம் இறுதிக்கட்ட கட்டுமான பணிகளை நடத்திக்கொண்டு வருகிறது..