சதாப்தி விரைவு ரயிலுக்கு மாற்றாக அதிநவீன வசதிகளுடன் புதிய இரயில்

Home

shadow

                  ரயில் 18' விரைவு ரயிலை இயக்குவதற்கு அரசின் பொறியியல் துறை ஆய்வாளர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில்ரயில்18  ஒரு வாரத்தில்பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கபப்படுகிறது.


சதாப்தி விரைவு ரயிலுக்கு மாற்றாக , அதிநவீன வசதிகளுடன் 16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலை, இந்திய ரயில்வே 18 மாதங்களில் தயாரித்துள்ளது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில், இந்த ரயில் அரசின் பொறியியல் துறை ஆய்வாளரின் ஒப்புதலுக்கு கடந்த திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. ரயிலை 3 நாள்கள் ஆய்வு செய்த ஆய்வாளர் அலுவலகம், அதை இயக்குவதற்கு புதன்கிழமை அனுமதி அளித்தது. இதுதொடர்பான அறிக்கை, ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு ரயில் சேவையை எப்போது தொடங்கலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான செய்திகள் :