சந்திரயான்-2 திட்டம் - ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

Home

shadow

        சந்திரயான்-2 திட்டத்திற்கான ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோசந்திரன் குறித்து ஆய்வு செய்வதற்காக சந்திரயான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் சந்திரயான்-1 திட்டம் வெற்றியை தொடர்ந்து, தற்போது சந்திரயான்-2-வது திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. இந்த விண்கலம் வரும் ஜனவரி மாதம் 3-ந்தேதி ஜி.எஸ். எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான இறுதி கட்ட சோதனைகளில் இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது. குறிப்பாக ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக்என்ஜின் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. சந்திரன் ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ள சந்திரயான்-2 விண்கல திட்டம் மிகவும் சிக்கலானது எனவும்ட, இந்த விண்கலத்தை கொண்டு செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டில் கிரயோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்பட எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர் மேலும், இதற்கான சோதனை நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு உள்ளது எனவும், முதல் முயற்சியில் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

இது தொடர்பான செய்திகள் :