சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது

Home

shadow

           சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது

           சந்திராயன் - 2 விண்கலம் வரும் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 
           ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன்- 2 விண்கலத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்படும் சந்திராயன் - 2 விண்கலம் 3,788 கிலோ எடை கொண்டதாகும். இதில் ரஷ்யாவின் இஸாடோப் நிறுவனம் ஆல்பா எமிட்டர் பாகங்களை வழங்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஆய்வு மையத்தில் தற்போது சந்திராயன் - 2விண்கலம்  நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி அதிகாலை 2:51 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான செய்திகள் :