சர்வதேச இணையதள முடக்கம் - இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது

Home

shadow

              இந்தியாவில் இணையதள முடக்கம் ஏற்படாது என சைபர் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.


அடுத்த
, 48 மணி நேரத்துக்கு, இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும், 'சர்வர்'களில், பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சர்வதேச அளவில், இணையதள பயன்படுத்துவது, சிக்கலானதாக இருக்கும் என கூறப்பட்டிருந்தது.  


இந்நிலையில் இது தொடர்பாக தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் குல்ஷன் ராய் தெரிவிக்கையில், செய்திகளில் வெளியானதுபோல், போல் இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது என தெரிவித்துள்ளார். 


இணையதளத்தை நிர்வகிக்கும் ஐ.சி.ஏ.என்.என்., எனப்படும், 'தி இன்டர்நெட் கார்ப்பரேஷன் ஆப் சைன்டு நேம்ஸ் அண்டு நம்பர்ஸ்' அமைப்பு கூறுகையில், இந்த பராமரிப்பு பணி காரணம் மிகக் குறைந்த அளவிலான இணையதள பயன்பாட்டாளர்களுக்கே பாதிப்பு ஏற்படும் எனவும், 99 சதவீதத்திற்கு அதிகமான பயன்பாட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளது. 


மேலும், சிறிதளவு பாதிப்பு என்பது விரைவாக சரிசெய்யப்பட்டு விடும் எனவும் தெரிவித்துள்ளது

இது தொடர்பான செய்திகள் :