சாம்சங் விழாவில் பிரதமர் உரை

Home

shadow


           மேக் இன் இந்தியாமூலம் உலகின் 2-வது பெரிய செல்போன் உற்பத்தியாளராக இந்தியா உருவாகியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் பிரபல சாம்சங் செல்போன் நிறுவனத்தின்  தொழிற்சாலை 35 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலையான இதனை, பிரதமர் மோடி மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்  இணைந்து நேற்று தொடங்கி வைத்தனர்.  பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி,  இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் ஸ்மார்ட் போன்களையும், 32 கோடி பேர் இணையதள வசதியையும் பயன்படுத்தி வருவதாக கூறினார். இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் 120 செல்போன் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளதாகவும், வற்றில் 50 சதவீதத் தொழிற்சாலைகள் நொய்டா நகரில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் சுமார் 4 லட்சம் மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் கொரிய நிறுவனமான சாம்சங் தனி இடத்தை பிடித்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.சில தொழிலதிபர்களை சந்திக்கும்போதுநடுத்தர இந்திய மக்களின் வீடுகளில் கொரியா நாட்டு பொருட்கள் இல்லாத வீடுகளே இருக்க முடியாது என தான் கூறுவது உண்டு என்று  குறிப்பிட்ட பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உலகின் 2-வது மிகப்பெரிய செல்போன் உற்பத்தியாளராக இந்தியா உருவாகியுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய  தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்இந்தியாவின் அதிவேக வளர்ச்சியில் கொரிய நிறுவனங்கள் பங்காற்றி வருவதாக கூறினார்.

மென்பொருள் துறையில் இந்தியாவும், மின்னணு கருவிகள் தயாரிப்புத் துறையில் தென்கொரியாவும் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்ட அவர். இரு நாடுகளின் திறனும் ஒன்றையொன்று மேலும் வலுப்படுத்துவதாக கூறினார்.  முன்னதாக, டெல்லியில் இருந்து பிரதமர் மோடியும், தென் கொரிய அதிபரும் மெட்ரோ ரயில் மூலமாக நொய்டா வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :