சிரியாவுக்கு நவீன எஸ் 300 ரக ஏவுகணைகளை இன்னும் இரண்டு நாட்களுக்குள் வழங்க ரஷ்யா எடுத்துள்ள முடிவுக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு

Home

shadow

 

சிரியாவுக்கு நவீன எஸ் 300 ரக ஏவுகணைகளை இன்னும் இரண்டு நாட்களுக்குள் வழங்க ரஷ்யா எடுத்துள்ள முடிவுக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


சிரியாவின் வான் பாதுகாப்பை அதிரிகரிப்பதற்கான முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது.கடந்த வாரம் சிரியாவின்  எல்லை பகுதியில்  வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய போர் விமானம் ஒன்று சிரிய ராணுவத்தால் சுடப்பட்டது.சிரிய ராணுவத்தின்  தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக இஸ்ரேல் , ரஷ்யாவின் பெரிய ஐ.எல் 20 போர்விமானத்திற்கு பின்னால் ஒளிந்துகொண்டதால் சிரியா ராணுவத்தின் ஏவுகணை  தவறாக ரஷ்யா விமானத்தை தாக்கியுள்ளது என்பதை  தொழில் நுட்ப உதவியுடன் ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது.ஆனால் இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது.இந்நிலையில் சுமார் 300 கிலோ மீட்டர் . தொலைவு வரை பாய்ந்து சென்று எதிரி ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் திறன் கொண்ட உயர்தொழில்நுட்ப எஸ்-300 ரக ஏவுகணைகள் இரண்டு வாரத்திற்குள் சிரியாவுக்கு வழங்கப்படும் என ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கி சோய்கு தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், ரஷ்யாவின் இந்த முடிவு இஸ்ரேல் பிரதமருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக  தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :