சீனா மாணவர்கள் தானியங்கி மிதிவண்டியை அறிமுகம் செய்து சாதனை

Home

shadow

                         சீனாவை சேர்ந்த சிங்குவா பல்கலைக்கழக மாணவர்கள் தானியங்கி மிதிவண்டியை அறிமுகம் செய்து  சாதனை படைத்துள்ளனர்.

சீன மக்கள் இடையே மிதிவண்டியின்  பயன்பாடு அதிகம். அந்த வகையில்  தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் கூடிய மிதிவண்டியின்  பயன்பாடுகளுக்கான  தேவைகள் அதிகரித்துள்ளன. இதனை மனதில் கொண்டு சீனாவை சேர்ந்த சிங்குவா பல்கலைக்கழக மாணவர்கள் தானாக இயங்கும் மிதிவண்டியினை அறிமுகம் செய்த்துள்ளனர். ஸ்டீயரிங் கட்டுப்பாட்டு முறையினை பயன்படுத்தி தானாக முன்னும் பின்னும் வெவ்வேறு வேகத்தில் இயங்கும் ஆளில்லா மிதிவண்டியானது  நீர் மற்றும் உபகரணங்களை எடுத்துச் செல்ல பயன்படும்  என்றும் வெளிப்புறங்களில் உடற்பயிற்சி செய்யும் போது நம்மை பின்தொடரும் என்றும் இதனை கண்டுபிடித்த மாணவர்கள் கூறுகின்றனர்.மனிதன் மிதிவண்டியினை செயல்படுத்துவது போலவே தானாக இயங்கும் இந்த மிதி வண்டியினை வடிவமைத்ததாகவும் புவியின் மைய விசையினை மிதி வண்டியின் கைப்பிடி கட்டுப்படுத்துவதன் மூலம் மிதிவண்டி தன்னை நேராக செலுத்துவதாகவும் அந்த மாணவர்கள் கூறினர்.

இது தொடர்பான செய்திகள் :