சீனா விண்வெளி நிலையம்

Home

shadow


      செயலிழந்த சீன விண்வெளி நிலையம் இன்று காலை புவியின் வான்பரப்பில் நுழைந்த போது முற்றிலும் எரிந்ததாக சீன விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட டியாங்காங்-1 சீன விண்வெளி  நிலையம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது செயல்பாட்டை நிறுத்தியது. சீன விண்வெளி ஆய்வு நிலைத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி சென்ற டியாங்காங் 2017-ஆம் ஆண்டின் இறுதியில் பூமியின் மீது விழலாம் என முதலில் தெரிவிக்கப்பட்டது. மனிதர்கள் வாழும் பரப்பில் விண்வெளி நிலையம் விழுந்தால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆய்வு நிலையங்கள் எச்சரித்திருந்தன. பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு ஏப்ரல் 2-ம் தேதி சீன விண்வெளி நிலையம் பூமி மீது விழும் என தெரிவிக்கப்பட்டது. முதலில் பிரேசிலின் சாவோ போலோ நகர் அருகே அட்லாண்டிக் கடல் பரப்பில் விழும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலை 5:30 மணி அளவில் தென் பசுபிக் கடல் பரப்பின் மீது விண்வெளி நிலையம் புவி பரப்பிற்குள் நுழைந்ததாகவும், அதன் பெரும்பான்மையான பகுதிகள் வளிமண்டல  பகுதியிலேயே முற்றிலுமாக எரிந்து விட்டதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இதனால் பெரிய அளவிலான பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :