சீனா - ஈரான் அணு சக்தி ஒப்பந்தம்

Home

shadow

ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்தின் தெளிவான எதிர்கால வடிவமைப்புக்கு தேவையான பணிகளை முன்னெடுப்பதற்காக சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அணு சக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா திரும்ப பெற்றுக் கொண்டதை தொடர்ந்து, ஒப்பந்தத்தில் இடம்பெற்ற மற்ற நாடுகளுடன் அதனை தொடர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை ஈரான் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷரீப் சீனா, ரஷ்யா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் சீனா சென்ற அவர், அங்கு அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஈரான் எந்த ஒரு முடிவுக்கும் தயாராக இருப்பதாகவும், அதே நேரம் அணுசக்தி ஒப்பந்தம் தொடர வேண்டுமானால் ஈரான் மக்களின் நலன்களை உறுதி செய்ய வேண்டும் என ஜாவத் தெரிவித்துள்ளார். இரு நாட்டு அமைச்சர்களின் சந்திப்பிற்கு பின்னர் பேசிய சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங், ஜாவத்தின் இந்த பயணம் அணு சக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்க உதவும் எனவும், ஈரானின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.  முன்னதாக, ஜாவத், ஐரோப்பிய நாடுகள் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த உறுதிப்பாட்டை அளிக்காவிடில், ஈரான், தொழில்துறை தரத்திலான யுரேனியம் செறிவூட்டல் பணியை எந்த தடையும் இன்றி தொடங்கும் என தெரிவித்துள்ளார். சீன பயணத்தை முடித்து கொண்டு அடுத்ததாக ஜாவேத் ரஷ்யா செல்ல உள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :