சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த விமான கண்காட்சி ஜே-20 அதி நவீன ஜெட் ரக போர் விமானம் முதன் முறையாக காட்சிப்படுத்தபட்டது

Home

shadow

 

சீன ராணுவத்தின் 69-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த விமான கண்காட்சியில்  ஜே-20 எனும் அதி நவீன ஜெட் ரக போர் விமானத்தை சீனா முதன் முறையாக காட்சிப் படுத்தியுள்ளது.


சீன ராணுவம்  தன்னுடைய ராணுவ வலிமையை அதிகப்படுத்திக் கொள்வதில்  முனைப்பு காட்டி வருகிறது. அந்நாட்டிடம் அதி நவீன போர்க்கருவிகள் பல இருக்கலாம் என மதிப்பிடப்பட்டு வரும் நிலையில், அவற்றை வெளிப்படுத்தாமல் சீனா ரகசியம் காத்து வந்தது. இந்நிலையில் அதி நவீன ஜே-20 என்ற ஜெட் ரக போர் விமானத்தை முதன் முறையாக சீனா காட்சிப்படுத்தியுள்ளது. 4 ஏவுகணைகளைக் கொண்ட ஜெட் போர் விமானங்கள் ஷாங்காயில் நடந்த விமானக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. சீன ராணுவத்தின் 69-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஜே-20 ரக போர் விமானத்தை சீனா காட்சிப் படுத்தியுள்ளது. இந்த போர் விமானம் அமெரிக்காவின் அதிநவீன எஃப்-22, எஃப்-35-யைக் காட்டிலும் அதிக திறன் கொண்டது. வானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் இந்த ஜே-20 ரக போர் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :