சென்னை - சிறிய அளவில் செயற்கைக்கோள்

Home

shadow


சென்னை மாணவி வில்லட் ஓவியா தயாரித்துள்ள, காற்றிலுள்ள மாசுகளின் அளவை துள்ளியமாக கண்டறியும் சிறிய அளவிலான செயற்கைக்கோள். அடுத்த மாதம் 6ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் காற்றிலுள்ள மாசுபாடுகளை கண்டறியும் வகையில், 150 கிராம் எடை கொண்ட சிறிய அளவிலான செயற்கைக்கோளை  சென்னையைச் சேர்ந்த வில்லட் ஓவியா என்ற 12ஆம் வகுப்பு மாணவி தயாரித்துள்ளார். அனிதா சாட் என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் அடுத்த மாதம் 6ஆம் தேதி மெக்சிகோவில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்நிலையில் அந்த செயற்கைக்கோளை தயாரித்த மாணவி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி வில்லட் ஓவியா, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் காற்றிலுள்ள மாசுபாடுகளை கண்டறியும் வகையில், 150 கிராம் எடை கொண்ட சிறிய அளவிலான செயற்கைக்கோளை உறுவாக்கி உள்ளதாகவும், இதனை அக்னிஸ் இக்னைட் அறிவியல் கண்டுபிடிப்பு குழுவினருடன் இணைந்து உருவாக்கியதாக தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :