சென்னையில் தயாரிக்கப்பட்டு வரும் அதிவேக “ட்ரெயின்-18” செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும்

Home

shadow

       சென்னையில் தயாரிக்கப்பட்டு வரும் அதிவேக ட்ரெயின்-18” வகை ரயில்கள் செப்டம்பரில் முழு பயன்பாட்டுக்கு வரும் என ஐ.சி.எஃப். நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையான ஐ.சி.எஃப்.-இல் ட்ரெயின் 18 ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் தயாரிக்கப்படும் இந்த ரயிலுக்கான பணிகள் செப்டம்பரில் முடிவடைந்து பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டுக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து  ஐ.சி.எஃப். நிறுவனத்தின் பொது மேலாளர் சுதன்சு மணி கூறுகையில், இந்த அதிவேக ரயிலை 16 மாதங்களில் தயாரித்துள்ளதாகவும், இதுவே உலகின் வேறு பகுதியில் தயாரித்திருந்தால் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை ஆகியிருக்கும் எனவும் தெரிவித்தார். இந்த ரயில் ஜூலை மாதம் ஆலையிலிருந்து வெளிவந்து விடும் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால், தற்போது செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதிநவீன வசதியான இருக்கைகளுடன் அமைக்கப்படும் இந்த ரயில் சதாப்தி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மாற்றாகக் கொண்டுவரப்படுகிறது எனவும் ஒட்டுமொத்தமாக தயாரிக்கப்பட்டுள்ள 6 ரயில்களில் இரண்டு ரயில்கள் படுக்கை வசதிகளுடன் கூடியது எனவும் சுதன்சு மணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :