செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவால் அனுப்பட்ட கியூரியாசிட்டி விண்கலத்தின் மைய கணினியில் கோளாறு

Home

shadow

                            செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவால் அனுப்பட்ட கியூரியாசிட்டி விண்கலத்தின் மைய கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.பூமிக்கு அடுத்த படியாக செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றங்களை அமைப்பதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுப்பட்டுள்ளனர்இது தொடர்பான ஆராய்ச்சியில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஈடுப்பட்டுள்ளன


செவ்வாய் கிரக ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக கடந்த 2011-ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கியூரியாசிட்டி எனும் விண்கலத்தை விண்ணில் செலுத்தியதுசுமார் 9 மாதங்கள் பயணித்து 56 கோடி கிலோ மீட்டர் தூரத்தை கடந்து 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செவ்வாய் கிரகத்தை கியூரியாசிட்டி விண்கலம் அடைந்ததுகடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாயில் இருந்து பல முக்கிய தகவல்களை கியூரியாசிட்டி விண்கலம் பூமிக்கு அனுப்பி வந்ததுஇந்நிலையில், கடந்த சனிகிழமை முதல் இந்த விண்கலத்தின் தகவல் அனுப்பும் பகுதியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதுகுறிப்பிட்ட சில தகவல்கள் மட்டும் வந்த நிலையில், விண்கலத்தில் இருந்த பிற தகவல்களை விஞ்ஞானிகளால் பெற முடியவில்லைஇந்நிலையில், விண்கலத்தின் மைய கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, கியூரியாசிட்டி விண்கலம் தனது பணியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதுவிண்கலத்திற்கான மின் சக்தியை 3 மாதம் நிறுத்தி வைக்க நாசா முடிவு செய்துள்ளது


இதனிடையே விண்கலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :