சோயுஸ் 11 விண்கலம், பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சென்றடைந்துள்ளது

Home

shadow

 

ரஷ்யாவின்,சோயுஸ் - 11 விண்கலம், பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சென்றடைந்துள்ளது.


ரஷ்யாவின் கஜகஸ்தானில் இருந்து கடந்த அக்டோபர் மாதம்  சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு புறப்பட்ட சோயுஸ்  விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனை அடுத்து  அந்த  விண்கலத்தின்  அவசர  வழியில் இருந்து தனி கேப்சூல்  மூலம் கீழே குதித்து  அதில் பயணித்த விண்வெளி வீரர்கள் உயிர்தப்பினர். இதனால்    அந்த பயணம் நிறுத்தி வைக்கப்பட்டது. சோதனை ரீதியாக மூன்று முறை ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் பைக்கானுர் விண்வெளி மையத்தில் இருந்து இந்த சோயுஸ்-11 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது.தற்போது இது வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புவி வட்ட பாதைக்கு வெற்றிகரமாக சென்றடைந்துள்ளது. இதில் ரஷ்யாவைச் சேர்ந்த ஒலெக் கொனொனென்கோ, (Oleg Kononenko), அமெரிக்காவைச் சேர்ந்த  ஆன்னி மெக்லெய்ன் (Anne McClain), கனடா நாட்டை  சேர்ந்த செய்ன்ட் ஜாக்யுஸ் (Saint Jacques) ஆகியோர் சென்றனர்.இவர்கள் வரும் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அங்கு தங்கி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :