ஜப்பான் நாட்டில் உணவகம் ஒன்றில் பணியாளராக அமர்த்தப்பட்டுள்ள ரோபோ

Home

shadow

                         ரோபோக்களின் ஆதிக்கம் நிறைந்த ஜப்பான் நாட்டில் ,தொலை தூரத்தில்  இருந்து இயக்கப்படும் ரோபோ ஒன்று உணவகம் ஒன்றில் பணியாளராக அமர்த்தப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள உணவகம் ஒன்றில், சுமார் 3 அடி 90 அங்குலம் உடைய ஓஹைம்-டி எனப்படும் தொலை தூரத்தில் இருந்து இயக்கப்படும் ரோபோ ஒன்று சோதனை ஓட்ட முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளது.  கடுமையான உடல் நல  பாதிப்புகளுடன் வீட்டை விட்டு வெளியேற முடியாதவர்கள்  ,வீட்டில் இருந்த படியே தங்களது தொழிலினை கவனித்து கொள்ள உதவும் வகையில் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோட்டுகளை இன்டர்நெட் வசதியுடன் வீட்டில் இருந்த படியே லேப்டாப் அல்லது டேப்லெட்டுகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். இந்த வகை ரோபோட்டுகளின் வருகை பல பெரிய வாய்ப்புகளை உலக அளவில் உருவாக்கும் என , இதை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :