ஜப்பான் நாட்டுக்கு ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்களை வழங்க ஒப்புக்கொண்டதன் மூலம் ஆயுத கட்டுப்பாட்டு உடன்படிக்கையை அமெரிக்கா மீறியுள்ளது என ரஷ்ய கண்டனம் தெரிவித்துள்ளது

Home

shadow

அமெரிக்காவிடம் இருந்து இரண்டு அமெரிக்க ஏஜிஸ் அஷோர் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ஜப்பான் அமைச்சரவை சென்ற வாரம் முடிவு செய்தது. வட கொரியாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில்,  இது மிகவும் அவசியமான ஒன்று என ஜப்பானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. ஜப்பானின் இந்த அறிவிப்பை அடுத்து,30 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கையை அமெரிக்கா மீறியுள்ளது என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ஜப்பானுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை விற்பனை செய்வது,  உலகளாவிய ஏவுகணை அமைப்பை உருவாக்கும் அமெரிக்காவின் மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதியே என  ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா, தெரிவித்தார்.  ஆனால், ரஷ்யாவின் இந்தக் குற்றச்சாட்டுகளை அமெரிக்க வெளியுறவுத் துறை மறுத்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :