ஜிசாட் 31 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது

Home

shadow

                         தகவல் தொடர்பு சேவைகளுக்காக இந்தியா உருவாக்கி உள்ள ஜிசாட் 31 செயற்கைகோள் , பிரெஞ்ச் கயானாவில் இருந்து, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.


இந்தியாவின் தகவல் தொடர்பை மேம்படுத்தும் வகையில், இந்தியா உருவாக்கி உள்ள 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட் – 31, பிரான்ஸ் நாட்டின், பிரெஞ்ச் கயானாவில் இருந்து, ஏரியான் - 5 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. தகவல் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி சேவைகளை பெற, இந்த செயற்கைக்கோள் உதவும்  வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் மொத்தம், 2 ஆயிரத்து 535 கிலோ எடையுள்ளது.  இந்த செயற்கைக்கோள், உள்நாட்டில் தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமல்லாது நாட்டை சுற்றியுள்ள பெருங்கடல்கள் குறித்த தகவல்கள் பெற உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :