ஜிசாட்-11 தேதி மாற்றம் - இஸ்ரோ

Home

shadow


ஜிசாட்-11 செயற்கைகோளை விண்ணில் செலுத்துவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தற்போது, இணையதள சேவையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஜிசாட்-11 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. ஜிசாட்-11 செயற்கைக்கோள் மூலம் இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளுக்கும் இணைய சேவை விரைவாகவும் எளிமையாகவும் கிடைக்க வாய்ப்புள்ளது. 6 டன் எடைகொண்ட இந்த செயற்கைக்கோளை இந்தியாவிலிருந்து அனுப்ப முடியாது என்பதால், அமெரிக்கா வடிவமைத்துள்ள பிரெஞ்ச் ஏரியன் 5 ராக்கெட் மூலம் அடுத்த மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜிசாட்-11 செயற்கைகோளை விண்ணில் செலுத்துவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப ரீதியிலான சோதனைகள் நடத்த வேண்டி உள்ளதால், செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக, விளக்கம் அளித்துள்ளது.  

இது தொடர்பான செய்திகள் :