ஜிசாட்-29 தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ

Home

shadow

                 ஜிசாட்-29 தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.  இஸ்ரோ, உயர்நுணுக்கமான தகவல்தொடர்புக்கான ஜிசாட்-29 என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது. இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் மூலம் விண்ணில் நாளை ஏவப்பட உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில்  ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் 3 நிலைகளை கொண்ட ஒரு கனரக வகை ராக்கெட் என்றும், இதில் முதல் நிலைகளில் திட எரிபொருளும், 2-வது நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டும் 3-வது நிலையில் கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தனர். 10 டன் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், 4 டன் எடை கொண்ட செயற்கைகோளை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தும் திறன் கொண்டது என்றும் கூறியுள்ளனர். தொலைத்தூரத்தில் உள்ள தகவல் தொடர்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்கு க்யூ, வி என்ற நவீனதொழில்நுட்ப கேமரா மற்றும் கருவிகள், இந்த செயற்கைகோளில் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நாளை மாலை 5 மணிக்கு இதமான காலநிலை நிலவும் பட்சத்தில் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும் எனவும்  தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :