ஜி.எஸ்.எல்.வி எப்-8 - ஜிசாட்-6ஏ

Home

shadow


     ஜிசாட்-6 செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் நாளை மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 27 மணிநேர கவுண்டவுன் இன்று பகல் 1.56 மணிக்கு தொடங்குகிறது

தகவல் தொடர்பு மற்றும் தொலை தொடர்பு சேவைகளை மேம்படுத்தும்  வகையில் ஜிசாட்-6 செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர் சக்திகொண்ட எஸ்-பேண்டு வகையை சேர்ந்த இந்த செயற்கைக்கோள் 2ஆயிரத்து 140 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கைக்கோளில் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்துவதற்கான 24சி பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள், 6 விரிவாக்கப்பட்ட  டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன. தகவல் தொடர்பை டிஜிட்டல்  முறையில் சேகரிப்பது, தேடல் மற்றும் மீட்பு சேவைகளுக்கு இந்த செயற்கைகோள் மிகவும் பயன்படுகிறது. இந்நிலையில் ஜிசாட்-6 செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் நாளை மாலை 4.56 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 27 மணிநேர கவுண்டவுன் இன்று பகல் 1.56 மணிக்கு தொடங்குகிறது. இதையடுத்து ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.  

இது தொடர்பான செய்திகள் :