ஜி.எஸ்.எல்.வி எப்-8 - ஜிசாட்-6ஏ

Home

shadow


ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் தொடர்பு மற்றும் தொலை தொடர்பு சேவைகளை மேம்படுத்தும்  வகையில் ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர் சக்திகொண்ட எஸ்-பேண்டு வகையை சேர்ந்த இந்த செயற்கைக்கோள் 2ஆயிரத்து 140 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கைக்கோளில் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்துவதற்கான 24சி பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள், 6 விரிவாக்கப்பட்ட  டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன. தகவல் தொடர்பை டிஜிட்டல்  முறையில் சேகரிப்பது, தேடல் மற்றும் மீட்பு சேவைகளுக்கு இந்த செயற்கைகோள் மிகவும் பயன்படுகிறது. இந்நிலையில் ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் இன்று மாலை 4.56 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.  

இது தொடர்பான செய்திகள் :