ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் ஜிசாட் - 29 செயற்கைக்கோளுடன் நேற்று மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

Home

shadow

                 ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் ஜிசாட் - 29 செயற்கைக்கோளுடன் நேற்று மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரோவின் தயாரிப்பான உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய ஜிசாட்-29 என்ற செயற்கைகோள் நேற்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த ஆண்டு ஏவப்படும் 5-வது ராக்கெட் இதுவாகும். இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியதன் மூலம் இஸ்ரோ அடுத்த சாதனைக்கு தயாராகி வருகிறது. இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்புத்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த செயர்கைக்கோள் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு சேவையை துவங்கும் எனவும் இதனுடைய ஆயுட்காலம் 10 ஆண்டுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி இன்னும் துவங்கவில்லை எனவும், சோதனை அடிப்படையில் 2020 வரைக்கும் இரண்டு  ஆளில்லாத விண்கலம் தான் விண்ணுக்கு அனுப்பப்படும் என்றும் இதனையடுத்து  தான் மனிதனை அனுப்பும் விண்கலம் ஏவப்படும் என தெரிவித்தார். சூரியனை ஆராயும் ஆதித்யா திட்டம் 2020க்குள் செயல்படுத்தப்படும் என்றும் தற்போது ஏவிய ஜி.எஸ்.எல்.வி- மாக் 3 டிசுமார் 300 கோடி செலவில் ஏவப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :