ட்விட்டர் தகவல்களும் கசிவு

Home

shadow


முகநூல் நிறுவனத்தைத் தொடர்ந்து வாடிக்கையாளர் விபரங்களை கசியவிட்ட பிரச்னையில் ட்விட்டர் நிறுவனமும் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முகநூல் நிறுவனத்திடம் இருந்து வாடிக்கையாளர் விபரங்களை பெற்று அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது. தவறை ஒப்புக்கொண்ட முகநூல் நிறுவனர், மார்க் சூகர்பெர்க் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோரினார். இந்த நிலையில் இதே பிரச்னையில் ட்விட்டரும் சிக்கியுள்ளதாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா அதிகாரி அலெக்சாண்டர் கோகன் தெரிவித்துள்ளார். 2014 டிசம்பர் முதல் 2015 ஏப்ரல் வரை ட்விட்டர் நிறுவனம் தமது பயனாளர்களின் பதிவுகள், பெயர், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுக்கு அளித்ததாக அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் மீண்டும் அதிர்வலைகளை எழுப்பியுள்ள நிலையில், ட்விட்டர் நிறுவனம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. அதில், விளம்பரம் தொடர்பான பணிகளில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுடன் சில விவரங்களை பகிர்ந்து கொண்டதாகவும், தனிப்பட்ட உரிமை தொடர்பான விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் ட்விட்டர் வாடிக்கையாளர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :