தாராபுரம் தலைமை அஞ்சகலத்தில் வாடிக்கையாளர்களின் பணப் பட்டுவாடாவை எளிமைப்படுத்தும் வகையில் கையடக்க மின்னணுக் கருவி

Home

shadow

                                 தாராபுரம் தலைமை அஞ்சகலத்தில் வாடிக்கையாளர்களின் பணப் பட்டுவாடாவை எளிமைப்படுத்தும் வகையில் ஊழியர்களுக்கு கையடக்க மின்னணுக் கருவி வழங்கப்பட்டது.

தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் தலைமை அஞ்சல் நிலையத்தில் கிளை அலுவலக ஊழியர்களுக்கு கையடக்க மின்னணுக் கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய திருப்பூர் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் கோபிநாதன், இந்த கையடக்க மின்னணுக் கருவியின் மூலம் அஞ்சல் அலுவலகத்தின் அனைத்துப் பணிகளையும் ஒரே இடத்திலிருந்து மேற்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதற்கட்டமாக வாடிக்கையாளர்கள் பணம் போடவும், எடுக்கவும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த இயந்திரத்தில் வாடிக்கையாளர் கணக்கு எண்ணை டைப் செய்தால், அவரது பெயரைக் காட்டிவிடும் என்றும், வாடிக்கையாளர் பணம் எடுத்தாலோ, பணம் போட்டாலோ உடனடியாக வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் வந்து விடும் என்றும், உடனே கணினி ரசீதும் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

இது தொடர்பான செய்திகள் :