திருப்பூரில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

Home

shadow

 

திருப்பூரில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட எல்லீஸ் நகர் - பவர் ஹவுஸ் அருகே சரஸ்வதி நகரை சேர்ந்தவர் கட்டிட ஒப்பந்ததாரரான தியாகராஜன். இவரது மனைவி செல்வமதி அரசு ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது 2 மகள்களும் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்ட நிலையில், வழக்கம் போல் தியாகராஜனும் அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் மாலை வீட்டிற்கு வந்து கதவை திறக்கும் போது முன் கதவு உடைக்க பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலின்பேரில் அங்கு வந்த தாராபுரம் குற்றபிரிவு காவல்துறையினர், உரிமையாளர் தியாகராஜனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 45 பவுன் தங்க நகைகள், 35000  ரூபாய் ரொக்கம், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள டி.வி மற்றும் வெள்ளி பொருட்கள் போன்றவை கொள்ளை போனது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இது தொடர்பான செய்திகள் :