திருப்பூர் - ஏர்செல் சேவை முடங்கியது   

Home

shadow

ஏர்செல் செல்போன் நிறுவனத்தின் சேவை திடீரென முடங்கியதால், அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் திருப்பூரில் செயல்பட்டு வரும் ஏர்செல் நிறுவனத்தின் சேவை மையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல பகுதிகளில் ஏர்செல் செல்போன் நிறுவனத்தின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், திருப்பூரில் உள்ள பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக ஏர்செல் செல்போன் நிறுவனத்தின் சேவை சரிவர கிடைக்கவில்லை. மேலும் சமூக வலைத்தளங்களில் ஏர்செல் நிறுவனம் மூடப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து ஏர்செல் நிறுவனம் மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இன்று காலையில் ஏர்செல் நிறுவனத்தின் சேவை திடீரென முடங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஏர்செல் சேவை மையத்தை திடீரென முற்றுகையிட்டு, சேவை குறைபாடு குறித்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இது தொடர்பான செய்திகள் :