தேஜாஸ் சோதனை வெற்றி

Home

shadow


உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் விமானத்தில் வானில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான டி.ஆர்.டி.ஓ. சார்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானம் தொடர்ந்து பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக வானில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணையை தேஜாஸ் போர் விமானத்தில் இருந்து செலுத்தி சோதிக்கப்பட்டது. கோவா கடற்பகுதியில் நேற்று முன்தினம் நடந்த இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனை நிகழ்வுகள் அனைத்தையும் அதிநவீன கேமராவுடன் வேறு 2 தேஜாஸ் போர் விமானத்தில் சென்று ராணுவ அதிகாரிகள் கண்காணித்தனர். இதில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தேஜாஸ் போர் விமானம் நிறைவேற்றி இருந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றதற்காக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் பாராட்டுத்  தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பான செய்திகள் :