தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு முறிவு ஏற்படுத்தியதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம்

Home

shadow

              தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு முறிவு  ஏற்படுத்தியதற்காக தொலைத்தொடர்பு  நிறுவனங்களுக்கு இதுவரை  58 லட்சம் ரூபாய்  அபராதம்  விதித்துள்ளதாக மாநிலங்களவையில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா  தெரிவித்துள்ளார்.


மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்  போது பேசிய  அவர்அழைப்பு முறிவு காரணமாக  பிஎஸ்என்எல்  நிறுவனத்துக்கு  ஜூன்  மாதம் வரையிலான முதல் காலாண்டில்  4 லட்சமும், ஐடியா நிறுவனத்துக்கு  12 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது என்றார்டிராய் சார்பில் வாடிக்கையாளர்களின் அழைப்பு முறிவுகள் கண்டறியப்பட்டு, அதன் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி கடந்த மார்ச் வரையிலான காலாண்டின் போது  பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு  3 லட்சமும் ரூபாயும், ஐடியா நிறுவனத்துக்கு 10 லட்சத்து 50000 ரூபாயும், டாடா நிறுவனத்துக்கு  22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், டெலினார் நிறுவனத்துக்கு  6 லட்சம் ரூபாயும் என மொத்தம்  58  லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும்  அழைப்பு முறிவை தடுக்கும் வகையில், வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்களை  பெறுவதற்காக  ஒருங்கிணைந்த குரல் பதிவு  அமைப்பை அரசு நிறுவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :