நவீன தொழில்நுட்பங்களை இந்தியா முமுமையாக பயன்படுத்துகிறது - தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு

Home

shadow

            நவீன தொழில்நுட்பங்களை இந்தியா முமுமையாக பயன்படுத்துகிறது என மத்திய தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்

 

தகவல்தொழில்நுட்பம், தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு உள்ளிட்ட டிஜிட்டல் துறைகளின் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் அடங்கிய  "கன்வெர்ஜென்ஸ் இந்தியா 2019' மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பயன் குறித்து பேசிய மத்திய தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, டிஜிட்டல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதுடன், உலகம் முழுவதும் பரவி வருகிறது என்றும், இந்த தொழில்நுட்பத்தை அனைத்து துறைகளிலும் பயன்படுத்தி சில நாடுகள் பயனடைந்து வருகின்றன என்றும் தெரிவித்தார். எதிர்கால டிஜிட்டல் சேவைகள், அலைக்கற்றையை திறம்பட பயன்படுத்துதன் மூலம் சிறப்பாக அமையும் என்றும் இந்தியாவும் நவீன தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்தி பயனடைய விரும்புகிறது எனவும் தெரிவித்தார். சேவைத்துறைகளில் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 5 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தெரிவித்த அவர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :