நாசா மார்ஸ் விண்கலம்

Home

shadow


அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி சோதனைகள் மேற்கொள்ளும் வகையில் இன்சைட் என்ற விண்கலத்தை நாளை அனுப்பவுள்ளது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் நிலவியல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளது.

இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய ஏழு மாதங்கள் ஆகும் என நாசா தெரிவித்துள்ளது. முயற்சி வெற்றிபெற்றால் இந்த ஆண்டு நவம்பர் மாதம், செவ்வாய் கிரகத்தில் இன்சைட் விண்கலம் தரையிறங்கி செவ்வாயின் மேற்பரப்பு மற்றும் அதன் நிலத்துக்கு அடியில் உள்ளவற்றை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் என நாசா தெரிவித்துள்ளது. இதுவரை அனுப்பிய விண்கலங்கள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை மட்டுமே ஆராய்ந்தது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகம் குறித்தும், சூரிய குடும்பம் குறித்தும் பல தகவல்களை இதன் மூலம் அறிய வாய்ப்பு உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இன்சைட் ஆய்வு மேற்கொள்ளும். 

இது தொடர்பான செய்திகள் :