பிரபலங்களை கூகுள் செய்தால் இன்ப அதிர்ச்சி: அசத்தும் கூகுள்

Home

shadow

சான்பிரான்சிஸ்கோ: கூகுளில் பிரபலங்களை தேடினால் வழக்கமான டெக்ஸ்ட் பதில்களை வழங்காமல், செல்ஃபி வீடியோ வடிவில் பதில் வழங்கும் புதிய வசதியை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் இனி கூகுளில் பிரபலங்களிடம் கேள்விகளை எழுப்பும் போது செல்ஃபி வீடியோ மூலம் கூகுள் உங்களுக்கு பதில் வழங்கும். எடுத்துக்காட்டாக, நடிகர் ரஜினியிடம் ஏதேனும் கேள்வி கேட்கும் பட்சத்தில், உங்களது கேள்விகளுக்கு செல்ஃபி வீடியோ வடிவில் பதில் அளிக்கப்படும். தற்சமயம் இந்த அம்சம் அமெரிக்காவில் மட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த அம்சம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய அம்சத்தின் மூலம் மொபைல் போனின் தேடல்களுக்கு நேரடியாக சம்பந்தப்பட்டவரிடம் இருந்தே பதில் பெற முடியும். என கூகுள் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. கூகுளில் உங்களுக்கு பிடித்த பிரபலங்களிடம் நீங்கள் கேள்விகளை பதிவிட வேண்டும், உங்களது கேள்விக்கு சிறிய செல்ஃபி வீடியோ மூலம் பதில் அளிக்கப்படும். இதில் வளர்ந்து வரும் பிரபலங்கள் முதல் நன்கு அறிமுகமான அதிக ரசிகர்களை கொண்ட பிரபலங்கள் இடம் பெற்றிருப்பர். இந்த செல்ஃபி வீடியோக்கள் ஏற்கனவே கூகுள் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கும். முதற்கட்டமாக பிரியண்கா சோப்ரா, வில் ஃபெரெல், டிரேஸ் எல்லிஸ் ராஸ், கினா ரோட்ரிகியூஸ், கெனான் தாம்சன், அலிசன் வில்லியம்ஸ், நிக் ஜோனஸ் மற்றும் சில பிரபலங்களை கொண்டு இந்த அம்சம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே பதிவிடப்பட்ட வீடியோக்கள் என்பதால் அதிகம் பேர் கேட்க விரும்பும் பொதுவான கேள்விகளுக்கு பிரபலங்கள் பதில் அளிப்பது போன்று இந்த அம்சம் இயங்குகிறது. தற்சமயம் அமெரிக்காவில் மட்டும் வழங்கப்படும் இந்த அம்சத்தில் மேலும் அதிகளவு பிரபலங்கள் சேர்க்கப்படுவர் என்றும் மற்ற சந்தைகளிலும் வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. எனினும் இந்தியாவில் இந்த அம்சம் வழங்கப்படுமா என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

இது தொடர்பான செய்திகள் :