பிரித்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி  

Home

shadow

ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவில் அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் பிரித்வி 2 ஏவுகணை நேற்றிரவு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.  ஒடிசா மாநிலத்தின் பலசோர் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் பல்வேறு ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,  அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிரித்வி 2 ஏவுகணை சோதனை நேற்றிரவு 8. 30 மணியளவில் நடைபெற்றது. இரவு நேரத்திலும் குறிப்பிட்ட இலக்கை அடையாளம் கண்டு தாக்கும் சோதனையில், கடற்கரையிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை மிகவும் துல்லியமாக தனது இலக்கை தாக்கியது.  கடந்த ஜனவரி 18-ம் தேதி நடைபெற்ற அக்னி-5 ஏவுகணை சோதனை,  பிப்ரவரி 6-ம் தேதி நடைபெற்ற அக்னி-1 ஏவுகணை சோதனை, நேற்று முன்தினம் நடைபெற்ற அக்னி-2 ஏவுகணை சோதனை ஆகியவற்றின் வெற்றியை தொடர்ந்து நேற்றிரவு நடத்தப்பட்ட பிரித்வி-2 ஏவுகணை சோதனையும் வெற்றி அடைந்துள்ளது என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு இந்த ஏவுகணை சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இது தொடர்பான செய்திகள் :