பி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

Home

shadow

 

 
  வணிகநோக்கத்துக்கா பிரிட்டனின் இரண்டு செயற்கைக்கோள்களுடன்செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

 


          ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய மற்றும் வெளிநாடுகளின் செயற்கைகோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன.


    அந்த வகையில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் நேற்று இரவு 10.08 க்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவா எஸ்..ஆர், எஸ்1-4 ஆகிய இரு செயற்கைக்கோள்களை இஸ்ரோ வணிக நோக்கில் விண்ணில் ஏவியது.  இதில் 445 கிலோ எடை கொண்ட நோவா எஸ்..ஆர். செயற்கைக்கோள் இயற்கைப் பேரிடர், வெள்ள அபாயம் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும். 444 கிலோ எடைக்கொண்ட எஸ்1-4 என்ற செயற்கைக்கோள் பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் ஆகியவற்றை கண்காணிக்கும். பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட


       44 புள்ளி 4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டது. இது இஸ்ரோ சார்பில் அனுப்பப்படும் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் சிவன் பேசுகையில், பி. எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நாள் எனவும் இது போன்ற சாதனைகள் மூலம் மேலும் பல நாடுகள் வணிக ரீதியாக நம்மை அணுகும் எனவும் தெரிவித்தார்


       மேலும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் ஏவப்பட்டதன் மூலம் 220 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது எனவும், சந்திரயான் 2 செயற்கைக் கோள் அடுத் ண்டு ஜனவரி 3 முதல் பிப்ரவரி 11-க்குள் விண்ணில் ஏவப்படும் எனவும் சிவன் தெரிவித்தார்.

 

இது தொடர்பான செய்திகள் :