புவி கண்காணிப்புக்கான இரண்டு செயற்கைக்கோள் - பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட்

Home

shadow

 

 

        புவி கண்காணிப்புக்கான இரண்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் இன்று இரவு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.


      இதற்கான கவுன்ட் டவுன் நேற்று பிற்பகல் 1.08 மணிக்கு தொடங்கியது.


 

         ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவு தளத்திலிருந்து இன்று இரவு 10.08 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

   
     பிரிட்டனைச் சேர்ந்த செயற்கைக்கோள் தொழில்நுட்ப நிறுவனத்துக்குச் சொந்தமான "நோவா எஸ்.ஏ.ஆர்.' மற்றும் "எஸ்1-4' ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களையும் வணிக ரீதியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

 
         இதில் 445 கிலோ எடைகொண்ட "நோவா எஸ்.ஏ.ஆர்.' செயற்கைக்கோள், இயற்கைப் பேரிடர், வெள்ளப் பாதிப்பு, பனிப் படலம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் பணிகளுக்காகவும், 444 கிலோ எடைகொண்ட "எஸ்1-4 செயற்கைக்கோள்', பேரழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு உளளிட்ட பணிகளுக்காகவும் அனுப்பப்படுகின்றன

 
      இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு, பூமியிலிருந்து 583 கிலோ மீட்டர் தொலைவில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
 
      இது இஸ்ரோ சார்பில் அனுப்பப்படும் 44-ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பான செய்திகள் :