பூமியின் மீது மோத வரும் விண்வெளி நிலையம்

Home

shadow


     சீனாவின் டியாங்காங் 1 விண்வெளி நிலையம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி பூமியின் மீது விழும் என ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு சீனா  டியாங்காங் 1 விண்வெளி நிலையத்தை விண்ணில் செலுத்தியது. 7 ஆயிரம் கிலோவுக்கும் அதிக எடை கொண்ட, இந்த விண்வெளி நிலையம் சில மாதங்களுக்கு முன்னர் தனது செயல்பாட்டை நிறுத்தியதோடு கட்டுப்பாட்டையும் இழந்தது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த டியாங்காங் 1 பூமியின் மீது விழ இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் தெரிவித்து வந்தன. இந்த நிலையில் தற்போதுடியாங்காங் 1 விண்வெளி ஆய்வு நிலையம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி பூமியின் மீது விழும் என ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பூமியின் வளிமண்டல அடுக்கில் நுழையும் போதே இதன் பெரும்பான்மையான பாகங்கள் தீயில் எரிந்து விடும் என்றும், சில பாகங்கள் கடல் பரப்பில் விழலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :