பூமியைத் துல்லியமாக கண்காணிக்க நாளை பி.எஸ்.எல்.வி சி - 43 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது

Home

shadow

                       பூமியைத் துல்லியமாக கண்காணிக்க நாளை பி.எஸ்.எல்.வி சி - 43 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவன், பி.எஸ்.எல்.வி சி- 43 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும் இதற்கான 28 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த  30  செயற்கைக்கோள்கள் உள்ளதாகவும், இதனுடன் புவி வெளிப்பரப்பை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்தியாவின் ஹைசிஸ் செயற்கைக் கோளும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  இது பூமியில் உள்ளவற்றை மிகத் துல்லியமாக கண்காணிக்க பயன்படும் என குறிப்பிட்ட அவர் குறிப்பாக விவசாயம், வனப் பகுதிகளை கண்காணிப்பதற்கு இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் ஜிசாட் 19 , ஜிசாட் 29, மற்றும் பிரான்ஸ் நாட்டில் இருந்து டிசம்பர் 5 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் மிகப்பெரிய செயற்கைக்கோள் ஜி.சாட் 20 ஆகியவற்றின் மூலம் அதிவேக இணைய சேவை கிடைக்கும் என தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :