பூமியைப் போன்று புதிய கிரகம்

Home

shadow

  

பூமியில் இருந்து சுமார் 260 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவுக்கு அப்பால் பூமியைப் போன்ற ஒரு புதிய கிரகத்தை பிரான்ஸ அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஏக்ஸ்-மார்செய்லே பல்கலைக்கழகம், லண்டனில் உள்ள வார்விக் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில்பூமியைப் போன்று நிறையுள்ள புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கே2-229பி  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகமானது பூமியை விட 20 சதவிகிதம் பெரியதாகவும், இரண்டாயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் கொண்டதாக இருப்பதாக தெரிகிறது. இந்த கிரகம் தனது நட்சத்திரத்துக்கு மிகவும் அருகில் அமைந்திருப்பதால் அங்கு அதிக அளவிலான வெப்பம் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த கிரமானது தனது நட்சத்திரத்தை 14 மணி நேரத்துக்கு ஒரு முறை சுற்றி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய கிரகத்தை கே2 என்ற தொலைநோக்கியின் மூலமாக கண்டு பிடித்ததால், இந்த கிரகத்துக்கு கே2-229பி என்று பெயரிட்டுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :