பேஸ்புக்கிலிருந்து இந்திய பயனாளர்களின் தகவலை கேம்பிரிட்ஜ் அனாலிடிக்கா நிறுவனம் திருடியதாக கூறப்படும் குற்றச்சாட்டு - சிபிஐ விசாரணை

Home

shadow


பேஸ்புக்கிலிருந்து இந்திய பயனாளர்களின் தகவலை கேம்பிரிட்ஜ் அனாலிடிக்கா நிறுவனம் திருடியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ தனது முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, அதிபர் டிரம்ப்பிற்கு ஆதரவான பிரச்சாரச்சத்திற்காக இங்கிலாந்தை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிக்கா நிறுவனம்  பேஸ்புக் பயனாளர்களின் தகவலை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, பேஸ்புக்கிலிருந்து இந்திய பயனாளர்களின் தகவலை கேம்பிரிட்ஜ் அனாலிடிக்கா நிறுவனம் திருடியதாக அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் கிறிஸ்டோபர் டிவிட்டரில் பதிவிட்டதோடு, சில ஆவணங்களையும் பகிர்ந்திருந்தார். இந்தியா முழுவதும் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம், பேஸ்புக் நிறுவனத்திற்கு நெருக்கடியை உண்டாக்கியது. இதனை தொடர்ந்து, கேம்பிரிட்ஜ் அனாலிடிக்கா விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அந்த வகையில் பேஸ்புக்கில் இருந்து இந்திய பயனாளர்கள் தகவல் திருடப்பட்டது குறித்து சிபிஐ தனது முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.

 

இது தொடர்பான செய்திகள் :