பே.டி.எம். செயலி 300 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிவு

Home

shadowஇந்திய வாடிக்கையாளர்களின் தனிநபர் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக பே.டி.எம் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. பே.டி.எம். செயலி மூலம் சாதாரண முதல் பெரிய நிறுவனங்கள், வங்கிகள் வரையில் பணப்பரிவர்தனை செய்ய முடியும். இந்நிலையில் பே.டி.எம் நிறுவனம் தங்களிடம் உள்ள தனிநபர் வாடிக்கையாளர்கள் விவரங்களை 3ஆம் நபரிடம் பகிர்ந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ள பே.டி.எம் நிறுவனம், இந்தியாவில் பே.டி.எம் நிறுவனத்தில் இணைந்துள்ள 300 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது. தங்களுடைய சட்டதிட்டங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட விசாரணைகளுக்கு மட்டுமே வாடிக்கையாளர்களின் தகவல்கள் சட்டத்துறையிடம் வழங்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது. தங்கள் நிறுவனத்துடன் தொடர்பு இல்லாத சிலர் வேண்டுமென்ற இதுபோன்ற வதந்திகளை பரப்புவதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :