பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்த சிறிய வங்கிகளை இணைப்பது அவசியம் - மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி

Home

shadow

                      பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்த சிறிய வங்கிகளை இணைப்பது அவசியம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.


டெல்லியில் நடைபெற்ற இந்திய வங்கிகள் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பொதுத் துறை வங்கிகள், ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் திகழ சட்ட ரீதியான செயல்பாடுகளை மேற்கொள்ளலாம் அல்லது, சிறிய வங்கிகளை ஒன்றிணைத்து, பெரிய வங்கிகளாக உருவாக்கலாம் என தெரிவித்தார். மேலும் பொதுத் துறையைச் சேர்ந்த, சிறிய வங்கிகளை படிப்படியாக இணைத்து, பெரிய வங்கிகளாக உருவாக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் கொள்கை எனவும் கூறினார் இந்த நடவடிக்கையின் மூலம், சர்வதேச வங்கிகளின் போட்டியை சமாளிக்க கூடிய வகையில், இந்திய வங்கிகள் வலிமை பெறும் எனவும் தெரிவித்தார். மத்திய அரசின் வெளிப்படையான நடைமுறை காரணமாக, பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்தது என தெரிவித்த அவர், மத்திய அரசு அமல்படுத்திய திவால் சட்டம், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை, வங்கிகள் காட்டிய தீவிரம் போன்றவற்றால், வாராக் கடன், குறைந்து வருகிறது என்றும் கூறினார்.  

இது தொடர்பான செய்திகள் :