போலிச் செய்திகளை தங்களுடைய தளத்தில் அனுமதிக்க மாட்டோம் என தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் முகநூல்மற்றும் ட்விட்டர்
நிறுவனங்கள் உறுதியளித்துள்ளது.
அமெரிக்க அதிபர்
தேர்தலில் முகநூல் கணக்கு தகவல்கள் திருடப்பட்டு பிரசாரத்திற்கு
பயன்படுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோன்ற பிரசாரம்
இந்திய தேர்தலின் போதும் மேற்கொள்ளப்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக.
சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதையடுத்து வாட்ஸ்-ஆப் நிறுவனம் போலிச் செய்திகள் பரவலை தடுக்க நடவடிக்கை
மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தங்களுடைய தளங்களில் போலிச் செய்திகளை பரவ அனுமதிக்க
மாட்டோம் என முகநூல் மற்றும் டுவிட்டர் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாக தலைமைத்
தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.